தமிழகத்தில் இதுவரை 400 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிப்பு..!
TN
black fungus
400 member
By Anupriyamkumaresan
தமிழகத்தில் இதுவரை 400 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
உலகத்தை ஆட்டிபடைக்கும் கொரோனா தொற்றுக்கே இன்னும் தீர்வு இல்லாத நிலையில் புதிதாக கருப்பு பூஞ்சை நோய் உருவெடுத்துள்ளது.
குறிப்பாக இந்த நோய் கொரோனாவில் இருந்து மீண்டோரையே தாக்குவதாக கூறப்படுகிறது.முதல் முறையாக மதுரையில் கண்டறியப்பட்டுள்ள இந்த நோய் படிப்படியாக பல்வேறு மாவட்டங்களில் கண்டறியப்பட்டு வருகிறது.
இதுவரை அதிகமாக சென்னையில் 111 பேருக்கும், வேலூரில் 74 பேருக்கும் என பல்வேறு மாவட்டங்களை சேர்த்து மொத்தமாக 400 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.