டாஸ்மார்க் மது குறித்து துரைமுருகன் கூறியது உண்மை தான் !!தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு,
அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
CAG தமிழக டாஸ்மார்க் குறித்து ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வருவாய் கணக்கில் transparency இல்லை என குறிப்பிட்டுள்ளது. இப்படி அறிக்கை வந்துள்ளது ஆச்சரியமில்லை. இன்னும் நான் முழு அறிக்கை படிக்கவில்லை. துரைமுருகன் அவர்கள் கூறியதை போல தண்ணீரை போல் தான் டாஸ்மார்க்கில் விற்கிறார்கள்.
போதை அதிகமாக வேண்டுமே என்ற காரணத்தால் தான், கஞ்சா போதை வழிகளை தேடுகிறார்கள். கள்ளக்குறிச்சியில் பலர் என்னிடம் சொன்னார்கள். டாஸ்மார்க்கிற்கு வரும் மதுவின் தரத்தை சரிபார்த்தர்களா? ஒரு பக்கம் குடிக்கு அடிமையாகிறார்கள், மற்றொரு புறம் போதை கிடைக்காமல் கஞ்சாவை தேடி போகிறார்கள். அதில் அவர் கூறியது உண்மை தான். இதற்கு தமிழக அரசு தான் காரணம்.
நகைச்சுவையாக துரைமுருகன் அரசு தான் செய்யவேண்டியதையெல்லாம் செய்யவில்லை என்பதை சொல்கிறார். அதனை நகைச்சுவையாக கடந்து செல்ல முடியாது. ஈஷாவில் யானை வழித்தடம் இருக்குனு சொல்லறாங்க. சட்டமன்றத்தில் துரைமுருகனே இதனை கேட்கிறார்...3 வருடமா என்ன பண்றீங்கனு.
சட்டமன்றத்தை பார்த்தாலே, அமைச்சரவையில் இருக்கும் பிரச்சனை சட்டமன்றத்திலேயே தெரிகிறது. சென்னையில் சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் உள்ளது. குப்பைகள் மழையின் போது, தண்ணீரில் கலக்கும். ஒரு பையன் இறந்தான் என்பதை பார்ப்பதை விட, நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை குறித்து சட்டமன்றத்தில் பேசுவதில்லை.
மக்களுக்காக போராடக்கூடிய சிறப்பு ஊதியம் காவல்துறைக்கு இன்னும் கொடுக்கவில்லை, இது தொடர்பாக நாங்களும் அறிக்கை கொடுத்துள்ளோம். இது கண்டிக்கதக்கது. இதில் ஏமாற்றம் மட்டுமே முதல்வர் வெளிநாடு போவது தவறில்லை. முதலீடு கொண்டு வரணும். ஆனால், வெள்ளை அறிக்கை கொடுக்கவே இல்லை.
வெள்ளை அறிக்கை
2 வருஷம் ஆச்சு துபாய் போயிட்டு வந்து. சிங்கப்பூர், ஜப்பான் குறித்தும் அறிக்கை இல்லை. ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து எந்த அறிக்கையும் இல்லை. முதல்வர் தனிப்பட்ட பயணம் போவது பிரச்சனையில்லை. ஆனால், மக்களின் பணத்தில் போகும் போது, மக்கள் கேட்கிறார்கள் என்ன லாபம் என்று. தொடர்ந்து முதல்வர் வெளிநாடு பயணம் போவதன் மர்மம் என்ன என்பது சாதாரண மனிதனின் கேள்வி.
தமிழகத்தை பொறுத்தவரை 3 விஷயத்தில் நாம் பின்தங்கியுள்ளோம். வெளிநாடு நிறுவனம் வரும் போது சில விஷயங்களை பார்க்கிறார்கள்.
ஒரு open accountancy எதிர்ப்பார்கள். கல்வியில் skill factor குறையுது. எல்லாரும் பெங்களூரு போறாங்க. அரசு இங்கே கவனம் செலுத்தணும். நான் முதல்வன் திட்டத்தில் யார் யார் உதவி பெற்றார்கள் என்பது தெரியவில்லை.
investment'இல் தமிழகம் பின்தங்குகிறது. மற்ற மாநிலங்கள் முன்னிற்கிறது. தமிழகத்தில் மது என்பது indian made foreign liquor, விட கள்ள என்பது ஆண்டு ஆண்டுகாலமாக தமிழகத்தில் இருந்தது.
அதனை திரும்ப திறக்கணும். கொஞ்ச கொஞ்சமா டாஸ்மார்க்கை குறைக்குணும். அரசு முன்னின்று மது நிற்கக்கூடாது.
100% மூடுவது சாத்தியமில்லை.
டாஸ்மார்க் மூடினால், சாராய நிறுவன முதலாளிகளுக்கு பிரச்சனை வரும், திமுகவிற்கு சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். அதில் துரைமுருகன் சொன்னது போல ஒன்னும் இல்லை.
கோயம்பத்தூர் குறித்து அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றுவோம். இந்த பட்ஜெட்டில் அதெல்லாம் வரும்.