திமுக கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பதுதான் பள்ளிக் கல்வித்துறையின் வேலையா ? : பாஜக அண்ணாமலை கேள்வி
திமுக நிகழ்ச்சிகளின் கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பதுதான் பள்ளிக் கல்வித்துறையின் வேலையா என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு விழாக்களுக்கு பள்ளி வாகனங்கள்
பாஜக அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் : இன்று கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் தமிழக முதலமைச்சர் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன்.

அரசு பொறுப்பேற்குமா
திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்
இந்த நிலையில் கோவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரூ.663 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினர் என்பது குறிபிடத்தக்கது.
புத்தர் சிலை விவகாரம் - வாக்குறுதியை காற்றில் பறக்க விட்ட அநுர அரசு: சுமந்திரன் கடும் சீற்றம் IBC Tamil