தமிழக பாஜக மாநில உரிமைக்காக போராடவில்லை - அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன்..!

ADMK BJP
By Thahir Jun 01, 2022 07:24 AM GMT
Report

முல்லை பெரியாறு பிரச்சனைக்காக தமிழக பாஜக போராடவில்லை என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் கூட்டணியில் பாஜக தொடர்ந்து இருந்து வருகிறது.இந்த நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பொன்னையன் தமிழக பாஜக மாநில உரிமைக்காக போராடவில்லை என கூறியுள்ளார்.

தமிழக பாஜக மாநில உரிமைக்காக போராடவில்லை - அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன்..! | Tn Bjp Is Not Fighting For Statehood Ponnaiyan

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அதிமுகவுக்கும்,பாஜகவுக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது.

பாஜகவுடனான கூட்டணி தொடர்ந்து வருகிறது.கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. நாங்கள் தமிழ்நாட்டின் உரிமைக்காக முக்கிய கொள்கைகளை வைத்துள்ளோம்.

ஒன்று இந்தியை ஏற்க மாட்டோம் என்பது எங்களது கொள்கை,தமிழகத்தில் இந்தியை திணிக்க வேண்டும் என்பது பாஜகவின் கொள்கை. நீட் தேர்வு நாங்கள் ஏற்க மாட்டோம் என்பது எங்களது கொள்கை.

அதை நீங்கள் ஏற்றாக வேண்டும் தமிழக எதிர்காலம் என்ன ஆனாலும் சரி,மாணவர்களின் நிலை என்ன ஆனாலும் சரி அதை நீட் தேர்வை தமிழ்நாட்டில் திணிக்கப்படும் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது பாஜக.

முல்லை பெரியாறு பிரச்சனையில் தமிழ்நாட்டு நலனுக்காக உச்சநீதிமன்றத்தில் பெற்ற ஆணையை கூட நடைமுறைபடுத்த மத்திய அரசு தயங்குகிறது என்றார்.

தமிழக பாஜக அதற்காக போராடவில்லை,தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என்ற போராட்டத்தில் எங்களுடன் இணைந்து செயல்படவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அனைவரையும விடுதலை செய்ய வேண்டும் என்று அமைச்சரவையில் அம்மா கொண்டு வந்த தீர்மானம்.

அதை நடைமுறைப்படுத்த எத்தனையோ போராட்டங்களை செய்து வருகிறோம்.ஆனால் தமிழர்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது மத்தியில் ஆளும் பிஜேபி அரசு என அவர் குற்றம்சாட்டினார்.

இதை தான் நான் சுட்டிக்காட்டினேன் இரட்டை வேடம் என்று,இரட்டை நிலை என்று கூறினார். தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனையான நதி நீர் பிரச்சனை,ஈழ பிரச்சனை,உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டினார். தமிழக பாஜக தமிழக மக்களின் நலனுக்காக போராடவில்லை என கூறினார்.