"மதமாற்றம் - தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி" - தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட்

annamalai ariyalur twitter post tn bjp head
By Swetha Subash Jan 20, 2022 12:24 PM GMT
Report

மதமாற்றம் - தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் படித்துவரும் 17 வயது லாவண்யா என்ற மாணவி, மதம் மாறச் சொல்லி பள்ளியில் கொடுத்த அழுத்தம் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த மாணவி பேசியிருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

“மதமாற்றம் - தமிழகத்திலே வேகமாக பரவுகின்ற ஒரு விஷச்செடி. ஏழை மக்களை துன்புறுத்தி இது போன்ற காரியங்கள் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கு மாநில அரசு கவனம் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்! மாணவியின் மரணத்திற்கு நியாயம் வேண்டும்!” என பதிவிட்டிருக்கிறார்.

மேலும், பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி, மரணத்திற்கு முன், பேசிய வீடியோ பதிவு, மனதைப் பதறவைக்கும் என குறிப்பிட்டு வீடியோ பதிவை பகிர்ந்து,

“நடுநிலையான விசாரணை நடைபெற்று, தவறு செய்தவர், கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.

ஏழை விவசாயி மகள் லாவண்யா வயது 17, அரியலூர் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படிக்கும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. இவரை மதம் மாறச் சொல்லி, பள்ளியில் கொடுத்த , விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என கூறியிருக்கிறார்.