ரூ.2,500 தருவதாக ஆசை காட்டி ஏற்கெனவே வந்த ரூ.1,000ஐயும் பறிப்பதா? பாஜக கேள்வி

Vijay BJP Nainar Nagendran
By Karthikraja Nov 19, 2026 05:20 AM GMT
Report

nainar nagendhiran condemns for removed beneficiaries in magalir urimai thogai: மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 தருவோம் என ஆசை காட்டி, ஏற்கெனவே வந்த ரூ.1,000-ஐயும் பறிப்பதா? என நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் கடந்த 2025 டிசம்பர் மாதம் சிறப்பு முகாம் மூலம் 2ஆம் கட்டமாக சேர்க்கப்பட்ட 16.94 லட்சம் பயனாளிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்குக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

ரூ.2,500 தருவதாக ஆசை காட்டி ஏற்கெனவே வந்த ரூ.1,000ஐயும் பறிப்பதா? பாஜக கேள்வி | Tn Bjp Condemns Regard Magalir Urimai Thogai

இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில்," தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தில், கடந்த 2025 டிசம்பர் மாதம் சிறப்பு முகாம் மூலம் இரண்டாம் கட்டமாக சேர்க்கப்பட்ட 16.94 லட்சம் பயனாளிகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்குக் கடந்த மூன்று மாதங்களாக உதவித் தொகை நிறுத்தப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள புகார்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

1.31 கோடி பெண்கள் மாதந்தோறும் பயனடைந்து வந்த இத்திட்டத்தில், தற்போது லட்சக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் வராமல் முடக்கப்பட்டிருப்பது திரு. விஜய் தலைமையிலான தவெக அரசின் ஏழைப் பெண்கள் மீதான அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில், “மகளிர் உரிமைத் தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவோம்” எனக் கவர்ச்சிகரமான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதது மட்டுமின்றி, ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 தொகையையும் நிறுத்தித் தமிழகப் பெண்களுக்குப் பச்சைத் துரோகம் இழைத்துள்ளார்.

இப்படித் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவது தொடர்கதையாகிவிட்டது. எனவே, தேர்தல் வாக்குறுதியை மீறி மகளிரை வஞ்சிக்கும் திரு. ஜோசப் விஜய் அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கைத் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். 

[

உடனடியாகப் பாதிக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் நிறுத்தப்பட்ட கடந்த மூன்று மாதங்களுக்கான ரூ.1,000 நிலுவைத் தொகையை எவ்விதச் சாக்குப்போக்கும் இன்றி வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் எனவும், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகையைக் காலதாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

[

இது குறித்து விளக்கமளித்துள்ள தமிழக அரசு, ஆனால், "தகவல் உண்மையில்லை எனவும், பயனாளிகளை நீக்குவதற்கான சிறப்பு நீக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, பயனாளிகள் இறந்திருந்தாலோ, திட்டத்தில் பயன்பெற தொடர்ந்து தகுதியற்றவர்களாக மாறியிருந்தாலோ புதுப்பித்தலின் போது நீக்கப்பட்டிருக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.