சற்று நேரத்தில் ஊழல் பட்டியல்களை வெளியீடும் அண்ணாமலை : பரபரப்பில் தமிழக அரசியல்
திமுக ஊழல் பட்டியல் இன்று வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், அதன் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
திமுக ஊழல் பட்டியல்
இன்று காலை 10:15 மணிக்கு DMKFiles என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை வெளியிடுவேன் என அறிவித்துள்ளார். ஊழல் பட்டியலை வெளியிட பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை அறிவித்தது போல் இன்று ஆதாரப்பூர்வமாக பட்டியலை வெளியிட்டால், இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தும் என்று கருதப்படுகின்றது.
அண்ணாமலை தகவல்
ஏற்கனவே அண்ணாமலை வெளியிட்ட வீடியோ முன்னோட்ட பதிவில் அந்த வ மறைந்த முன்னாள் முதலவர் கலைஞர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி எம்பி, எம்பி தயாநிதி மாறன் ஆகியோர் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.