தமிழகத்தில் அடக்குமுறை; அயோத்தி லைவ்வை தடுக்க முயற்சி - நிர்மலா சீதாராமன் காட்டம்!

Smt Nirmala Sitharaman Kanchipuram
By Sumathi Jan 22, 2024 06:34 AM GMT
Report

எல்இடி திரையை அகற்றியதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம்

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

nirmala sitaraman

இதனையொட்டி, கும்பாபிஷேக நிகழ்ச்சியை நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் பார்க்கும் வகையில் மத்திய பாஜக சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயில்களிலும் சொத்துகளை திருடி வருகிறார்கள் - நிர்மலா சீதாராமன்!

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயில்களிலும் சொத்துகளை திருடி வருகிறார்கள் - நிர்மலா சீதாராமன்!

நிர்மலா சீதாராமன் கண்டனம் 

அதன்படி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து அயோத்தி நிகழ்ச்சியை காணும் வகையில் எல்.இ.டி. திரை பொர அந்த எல்இடி திரையை அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி போலீசார் அகற்றினர்.

தமிழகத்தில் அடக்குமுறை; அயோத்தி லைவ்வை தடுக்க முயற்சி - நிர்மலா சீதாராமன் காட்டம்! | Tn Ayodhya Live Block Nirmala Sitharaman Condemned

இதுகுறித்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பதிவில், "காஞ்சியில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட எல்.இ.டி. திரைகள் அகற்றப்பட்டன.

தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது. திமுக அரசு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. எல்.இ.டி. திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது. இந்து விரோத திமுக அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.