நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்..தாத்தா மாமா, நண்பன்.. உதயநிதியின் சட்டசபை கன்னிப்பேச்சு!
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் உரையை ஆற்றினார்.
முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகியிருப்பதால், அவருடைய கன்னிப்பேச்சாக இந்த உரை அமைந்தது.
பேச்சின் தொடக்கத்திலேயே தி.மு.க-வின் மூத்த தலைவர்கள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் என அனைவரையும் குறிப்பிட்டு நன்றி சொன்னது தி.மு.க-வினருக்கு ஆச்சர்யத்தை அளித்தது.
உதயநிதி தனது பேச்சில் நெருங்கிய நண்பர் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு நன்றி சொல்லும்போது முத்தமிழறிஞர் காலத்தில் அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி மாமா, அவருக்குப் பிறகு இன்று என்னுடைய நண்பனாக தோளோடு தோள் நிற்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக உதயநிதி பேச முன்வரிசையில் அமர்ந்திருந்த அன்பில் மகேஷ் பூரிப்பூடன் உதயநிதியைத் திரும்பிப் பார்த்தனர்.
மேலும் தனது முதல் பேச்சிலேயே, நீட் தேர்வு பற்றிதான் அதிகம் பேசினார். உதயநிதி தமிழக மக்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதா பெயரை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சூட்டவேண்டும் என்று உதயநிதி கோரிக்கை வைத்தார் .
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழு அறிக்கையை ஆய்வு செய்து நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில், நீட் தேர்வுக்கு எதிராக சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.