செல்லூர் ராஜூவின் வாயை அடைத்த PTR.. விளக்கம் கொடுத்த முதல்வர்!

mkstalin sellurraju
By Irumporai Aug 25, 2021 01:58 PM GMT
Report

சட்டசபையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, பென்னி குவிக் வாழ்ந்த இல்லத்தை இடித்துவிட்டு, கலைஞர் நூலகம் கட்டுவதாக செய்தி பார்த்தேன் என்று கூறினார்.

அப்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறுக்கிட்டு விளக்கம் அளித்தார். அந்த இல்லம் பென்னிகுவிக் இல்லம் அல்ல. பென்னிகுவிக் மரணம் அடைந்தது 1911-ம் ஆண்டு இது கட்டப்பட்டது. 1912 முதல் 1915 வரை உள்ள காலகட்டம். எனவே அது பென்னி குவிக் இல்லமாக இருந்திருக்க முடியாது. எனவே உறுப்பினர் தவறான கருத்தை பதிவு செய்யக்கூடாது என்றார்.