காழ்புணர்ச்சி இருந்திருந்தால் அம்மா உணவகம் இயங்குமா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
இன்றைய சட்டப்பேர்வை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ஸ்டாலின் காழ்புணர்ச்சி இருந்திருந்தால் அம்மா உணவகம் இயங்குமா என கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் மெரினாவில் உயர்கல்வி மன்றத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கவில்லை என அதிமுக புகார் தெரிவித்தது. ஜெயலலிதா சிலைக்கு ஒரு மாத காலமாக மாலை அணிவிக்கவில்லை என்றும் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவானதை காழ்ப்புணர்ச்சியோடு தடுப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன்கூறியிருந்தார்.
இதற்கு பதில் கூறிய முதல்வர் ஸ்டாலின் காழ்புணர்ச்சியுடன் செயல்பட தொடங்கியிருந்தால் அம்மா உணவகம் தொடர்ந்து இயங்குமா? என கேள்வி எழுப்பினார்.