நாளை மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை

mkstalin tnassembly assemblyresumes tnoppositionparty
By Swetha Subash Apr 05, 2022 01:44 PM GMT
Report

கடந்த மாதம் 18-ந் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது.

தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பட்ஜெட் மீதும் கடந்த 24-ந்தேதி வரை விவாதம் நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது.

நாளை மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை | Tn Assembly To Resume Tomorrow

ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறும் நிலையில், முதல் நாளான நாளை (6-03-22) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

எனவே சட்டசபை கூட்டம் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்பதால் கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.