17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது

Tamil nadu
By Fathima May 11, 2026 03:46 AM GMT
Report

17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இடைக்கால சபாநாயகராக தெரிவான கருப்பையா சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

எதிர் எதிர் வரிசையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அமர்ந்திருக்க எதிர்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் அமர்ந்திருக்கிறார்.

தொடர்ந்து பேரவை தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெறும், மேலும் பெரும்பான்மையை கோரூம் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பும் நடைபெறும்.

108 தொகுதிகளை வென்ற தவெக, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லீம் லீக் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.