ஜூன் 21 ஆம் தேதி தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்
Tn government
Tn assembly
By Petchi Avudaiappan
ஜூன் 21 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜூன் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. பேரவையில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என கூறினார்.
மேலும் சட்டமன்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் கூட்டத் தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.