''காசு பணம் துட்டு மணி மணி '' : சட்டப்பேரவையினை கலகலப்பாக்கிய திமுக எம்.எல்.ஏ
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை கொள்கை குறிப்பு வெளியிடப்பட்டது. அப்போது தமிழ் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் ,பாலியல் வன்கொடுமை. வரதட்சணை மரணம். கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமைப் படுத்துதல் போன்ற குற்றங்களில் 2019ஆம் ஆண்டு முதல் 2021 ஜூன் வரை 4,967 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளததாக கூறப்பட்டது.
இது குறித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்ப்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதிமுகவினரின் கேள்விகளுக்கு பதில் கூறிய திமுக எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன், காவல்துறை என்பது நெருப்பு போன்றது. திமுக ஆட்சியில் திருவண்ணாமலை தீபமாக எரியும். எதிர்கட்சி ஆட்சியில் சொல்ல வேண்டியதில்லை.

காட்டுத்தீயா? குடிசை தீயா? என்பது ஆட்சியில் இருப்பவர்களை பொருத்தது என்று பேசிய எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன். காசு பணம் துட்டு மணி மணி என்று கடந்த காலங்களில் பாடிக் கொண்டு இருந்தவர்களை குற்றம் புரிந்தவர்கள் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பது ஏது என முதல்வர் ஸ்டாலின் பாடவைத்துவிட்டதாக சுட்டிக்காட்டினார். ஈஸ்வரப்பனின் கலகலப்பான பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.