முன்கூட்டியே நிறைவடையும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் - என்ன காரணம் தெரியுமா?
? தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒரு வாரம் முன்கூட்டியே நிறைவு பெறுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி கூடியது. அன்றைய தினம் பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
தற்போது அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழகத்தில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து தமிழக சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் கூட்டத்தொடர் நாட்களை குறைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர்செப்டம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.