இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு - ஆளூர் ஷா நவாஸ்

NarendraModi tnpolitics AloorShanavas medicalcolleges 10yearstarget
By Swetha Subash Apr 16, 2022 12:37 PM GMT
Swetha Subash

Swetha Subash

in அரசியல்
Report

இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு என ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

கே.கே.படேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் இது குறித்து பேசிய பிரதமர், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையால் அடுத்த 10 ஆண்டுகளில் டாக்டர்கள் எண்ணிக்கையில் இந்தியா புதிய சாதனை படைக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஆளூர் ஷா நவாஸ், ‘நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என மோடி தெரிவித்துள்ளார்.

இப்போது மோடி சொல்வதை எப்போதோ செய்துவிட்ட மாநிலம் தமிழ்நாடு. அதுபோல், புதிய கல்வி கொள்கையின் இலக்கான 2030-இல் 50% GER என்பதையும் ஏற்கெனவே எட்டிவிட்டது தமிழ்நாடு. எனவே தமிழ்நாட்டை பாஜக பின்பற்றவும்!’ என பதிவிட்டுள்ளார்.