ஆளும் கட்சியுடன் கை கோர்க்கிறதா பாண்டவர் அணி?
tnnadigarsangam
actorsassociationelections
kollywoodcinema
teampandavas
By Swetha Subash
தென்னிந்திய நடிகர் சங்கம்.. தேர்தல் ஏன்?
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன.
தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் என்றாலே எதிரணியினர் எதிரி அணியா மாறிடுறது இந்த தேர்தல்லையும் நடந்தது. ஆனால் தேர்தலுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் இருந்தது.
வழக்கும் தொடுக்கப்பட்டது. இதன் பின்னணியுடன், தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றையும் காணலாம்.