பீஸ்ட் படத்திற்கு தடை : முதலமைச்சருக்கு ஜவாஹிருல்லா கடிதம் , சிக்கலில் படக்குழு
இஸ்லாமிய சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்படுள்ள ‘‘பீஸ்ட்’’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது, படத்தின் கதை ரசிகர்களை பூர்த்தி செய்யவில்லையென்றாலும் , வெற்றிகரமாக திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ‘‘பீஸ்ட்’’ திரைப்படத்திறகு தடைவிதிக்க வேண்டும் என தமுமுக கட்சி தலைவர் ஜவாஹிருல்லா முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் பீஸ்ட் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் இந்தப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது.
எனவே, பீஸ்ட் படத்திற்கு தடைவிதிப்பதோடு மட்டுமல்லாமல் வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
மேலும், மனிதநேயப் பணிகளிலும், பேரிடர் கால மீட்புப் பணிகளிலும் தம் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் முன்னணியில் நிற்கும் முஸ்லிம் சமுதாயத்தை சிறுமைப் படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள பீஸ்ட் திரைப்படத்தை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க அமைதியின்மையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே மாண்புமிகு முதல்வர் அவர்கள் பீஸ்ட் திரைப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, வெறுப்பு அரசியலை தூண்டும் படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் ,இவ்வாறு அதில் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.