பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்! தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மெஜாரிடிக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கவுள்ளது.

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

அங்கு வேட்பாளர் மரணத்தால் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே மீதமுள்ள 292 தொகுதிகளுக்கான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிக்க தொடங்கியது.

மதிய நிலவரப்படி, பாஜக 88 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 202 இடங்களிலும் முன்னிலை பெற்றன.

மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிகமாகவே முன்னிலை வகிப்பதால் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்