இறால், முட்டை, மட்டன் சாப்ஸ் - கவனம் ஈர்க்கும் 111 வருட டைட்டானிக் கப்பலின் மெனுகார்டு!
டைட்டானிக் கப்பலின் உணவு வகைகளின் மெனுகார்டு வைரலாகி வருகிறது.
டைட்டானிக் கப்பல்
1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை ஆயிரம் கணக்கான பயணிகளோடு தொடர்ந்தது டைட்டானிக். சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை மையப்படுத்தி தான் ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் படத்தை இயக்கியிருந்தார். இந்தப்படம் ஆஸ்கர் விருதுக்கு 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை என மொத்தம் 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.
மெனுகார்டு
இந்நிலையில், டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான அன்றிரவு பயணிகளுக்குப் பரிமாறப்பட்ட உணவு வகைகளின் மெனுகார்டு பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அதில், முதல் வகுப்பு பயணிகளுக்கு மட்டன் சாப்ஸ், சிக்கன், டர்கி ரோஸ்ட், கஸ்டர்ட் புட்டிங், இறால், பலவிதமான சீஸ் உணவு வகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு ப்ளம் புட்டிங் போன்றவையும், மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கு பால், முட்டை, ஓட்மீல் போரிட்ஜ், ப்ரெட், பட்டர், மர்மலேட் போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன.
882 அடி நீளம், 92.5 அடி அகலம் கொண்ட டைட்டானிக் கப்பலின் நினைவு தினம் ஏப்ரல் 15 அன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.