பிரபல டைட்டானிக் திரைப்பட நடிகர் காலமானார்..!
By Thahir
டைட்டானிக் படத்தில் நடித்த பிரபல நடிகர் டேவிட் வார்னர் உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 80.
90களில் ஆங்கில மூவிகளில் ஒன்று டைட்டானிக் இது இன்று வரை அனைவராலும் ரசித்து பார்க்க கூடிய ஒரு திரைப்படம்.
1970-களில் வெளியான 'ஓமன்', 'டாரன்' ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் டேவிட் வார்னர். 1997-ல், ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான 'டைட்டானிக்' படத்தில் நடத்தியுள்ளார்.

பிரிட்டனின் மான்செஸ்டரில் பிறந்த டேவிட் வார்னர், கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.