காலத்தால் அழியாத ‘டைட்டானிக்’ - 25 ஆண்டு நிறைவையொட்டி மீண்டும் திரையரங்குகளில்...!

Viral Photos
By Nandhini Jan 12, 2023 09:13 AM GMT
Report

‘டைட்டானிக்’ படத்தின் 25 ஆண்டு நிறைவையொட்டி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

டைட்டானிக் படம்

1912ம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவு நேரத்தில் டைட்டானிக் என்ற மிகப்பெரிய கப்பல் மூன்றே மணிநேரத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1500 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 110 ஆண்டுகள் கடந்த பிறகு இந்த விபத்து மிகப்பெரிய கடல் விபத்தாக கருதப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இந்த உண்மைச் சம்பவத்தை 1997 ஆம் ஆண்டு, ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ஆங்கிலத் திரைப்பட டைட்டானிக் வெளியானது. இப்படத்தில், லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலர் நடித்தனர்.

உண்மைக் காதலை மையமாக வைத்து, பாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான டைட்டானிக் மூழ்கிய சோகக் கதையைப் பின்னணியாக வைத்து இப்படம் வெளிவந்து உலக மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தது.

காலத்தால் அழியாத இப்படம் 14 அக்கடமி விருதுகளுக்கு நியமனம் செய்யப்பட்டு, இதுவரை சிறந்த படத்துக்கான விருது உட்பட 11 விருதுகளை கைத்தட்டி சென்றது. அத்துடன் உலகளாவிய அளவில், இதுவரை இல்லாதபடி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூல் செய்த இப்படம் மாபெரும் சாதனைப் படைத்தது.

titanic-25th-anniversary-re-released

மீண்டும் திரையரங்குகளில் ‘டைட்டானிக்’

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் இப்படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. அதில், டைட்டானிக் படம் வெளிவந்து 25வது ஆண்டு நிறைவையொட்டி விரைவில் திரையரங்குகளில் மீண்டும் வெளியிட உள்ளதாக போஸ்டர் வெளியாகியுள்ளது.

மேலும், ஜேம்ஸ் கேமரூனின் கிளாசிக் 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், படத்தின் ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பு 3D 4K HDR & உயர்-பிரேம்-ரேட்டில் வரும் பிப்ரவரி 10ம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.