இணைவோம் இதயத்தால் : இறந்தும் ஒருவரை வாழ வைக்கும் இளைஞர்
திருவாரூரில் சாலை விபத்தில் உயிரிழந்த நபரின் இதயம் வட மாநில இளைஞர் ஒருவருக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞர்
திருவாரூர் அருகே சாலை விபத்தில் ஐய்யப்பன் எனபவ்ர் உயிரிழந்துள்ளார், இவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஐயப்பனின் இதயம் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் பிரித்து எடுத்தனர்.
இதய மாற்று சிகிச்சை
இந்த உறுப்புகள் சென்னை அரும்பாக்கம் மருத்துவமனைக்கு 4 மணிநேரத்தில் கொண்டு செல்லப்பட்டது.அங்கு சிகிச்சை பெற்று வரும் வட மாநில் இளைஞர்களுக்கு இந்த உறுப்புகள் பொறுத்தபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தான் இறந்துபோனாலும் வட மாநில் இளைஞர் ஒருவரை காப்பாற்றியுள்ள திருவாரூர் இளைஞரின் செயல் பல்ம் வேறு தரப்பினரிடையே பாராட்டினை பெற்றுள்ளது.