திருவாரூர் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!

Thiruvarur
By Karthikraja Jan 30, 2025 04:30 PM GMT
Report

திருவாரூர் மாவட்டம்

தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அறியப்படும் திருவாரூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்தும்,  நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்தும் சில பகுதிகளை பிரித்து 1 ஜனவரி 1997 அன்று தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 

thiruvarur district

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுச்சேரியின் காரைக்கால், பாக் நீரினை ஆகிய பகுதிகளுடன் திருவாரூர் மாவட்டம் தனது எல்லையை பகிர்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைபூண்டி(தனி), நன்னிலம் என 4 சட்டமன்ற தொகுதிகளும், திருவாரூர்,மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் என 4 நகராட்சிகளும் அமைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக 01.01.1997 அன்று எம்.ஆர்.மோகன் ஐ.ஏ.எஸ் பதவியேற்றார். இதனை தொடர்ந்து 32 மாவட்ட ஆட்சியர்கள் திருவாரூர் மாவட்டத்தில் பணியாற்றியுள்ளனர்.

சாருஸ்ரீ ஐ.ஏ.எஸ்

முன்னதாக பணியாற்றிய காயத்ரி கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, 05.02.2023 அன்று சாருஸ்ரீ ஐ.ஏ.எஸ் திருவாரூர் மாவட்டத்தின் 32வது மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்றார். 

charu shree IAS biography

கோவையை சேர்ந்த சாருஸ்ரீ ஐ.ஏ.எஸ் 2014 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். பொறியியல் படிப்பை முடித்துள்ள சாருஸ்ரீ ஐ.ஏ.எஸ் சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 6வது இடமும் தமிழக அளவில் முதலிடமும் பிடித்தார்.

முன்னதாக விழுப்புரம் மாவட்ட திருக்கோவிலூர் உதவி ஆட்சியர், சென்னை வணிகவரித்துறையில் உதவி ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஆகிய பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். சாருஸ்ரீ ஐ.ஏ.எஸ், திருவாரூரில் மாவட்டத்தில் முதல் முறையாக அரசு சார்பில் புத்தக கண்காட்சி நடத்தினார். நெகிழியை ஒழிப்பை முன்னெடுத்த இவர், அதில் சிறப்பாக செயலாற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விருது வழங்கப்படும் என அறிவித்தார்.

காயத்ரி கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

கேரளா மாநிலத்தை சேர்ந்த காயத்ரி கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் 2013 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். முன்னதாக பொள்ளாச்சி சார் ஆட்சியர், கோவை வணிக வரித்துறை (மாநில வரிகள்) மாவட்ட இணை ஆணையர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த இவர், 17-06-2021 முதல் 31-01-2023 வரை திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். 

gayathri krishnan IAS biography

இவர் பொள்ளாச்சியில் சார் ஆட்சியராக பணியாற்றிய போது, புதிதாக சாலை அமைக்கும் போது, மரங்களை வெட்டாமல் சாலை போடும் திட்டத்திற்காக, மரங்களை வேறு இடங்களுக்கு அப்படியே மாற்றும் திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் மக்களிடம் நெருங்கி பழகி அவரின் நன்மதிப்பை பெற்றார்.

வே.சாந்தா ஐ.ஏ.எஸ்

2005 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வே.சாந்தா ஐ.ஏ.எஸ், 28.10.2020 முதல் 16.06.2021 வரை திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். முன்னதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், நிலச் சீர்திருத்தக் கூடுதல் ஆணையர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். 

v santha IAS biography

முதல்வரின் முதன்மை செயலாளராக பதவி வகித்த டி. உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் 2009 ஆம் ஆண்டு காலகட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார்.