கொடூரம் : மனைவி, 6 குழந்தைகளை துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்..!
திருவண்ணாமலை அருகே குடும்ப தகராறில் தன் குடும்பத்தையே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி, 6 குழந்தைகள் கொலை
திருவண்ணாமலையைச் சேர்ந்த பழனி. இவர் விவசாய வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பழனி குடும்ப தகராறு காரணமாக தன் மனைவி மற்றும் 6 குழந்தைகளை உயிருடன் துடிக்க துடிக்க கோடாரியால் வெட்டி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி, 6 குழந்தைகளை கொடூரமாக வெட்டிகொன்று விட்டு பழனி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.