அம்மன் சிலைக்கு ரேஷன் சேலை.. சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலையார் கோவில்!

Tiruvannamalai
By Vidhya Senthil Jul 24, 2024 06:30 AM GMT
Report

அம்மன் சிலைக்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் விலையில்லா சேலை அணிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அம்மன் சிலைக்கு ரேஷன் சேலை.. சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலையார் கோவில்! | Tiruvannamalai Temple Ration Saree

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பவுர்ணமியின் போது கோவிலில் உள்ள உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள அம்மன் சிலைக்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் விலையில்லா சேலை அணிவிக்கப்பட்டு இருந்தது.

ஆன்மீக பயணத்திற்கு மட்டுமல்ல திருவண்ணாமலை - அதைத் தாண்டிய முக்கிய இடங்கள் இதோ..

ஆன்மீக பயணத்திற்கு மட்டுமல்ல திருவண்ணாமலை - அதைத் தாண்டிய முக்கிய இடங்கள் இதோ..

அம்மன் சிலைக்கு சேலை

இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி பேசுபொருளானது.    இதுகுறித்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையரிடம் கேட்ட போது ,'' அம்மனுக்கு திருவூடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அம்மன் சிலைக்கு ரேஷன் சேலை.. சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலையார் கோவில்! | Tiruvannamalai Temple Ration Saree

அப்போது மண்டக படியின் போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலையை சாத்தினர். பின்னர் நிகழ்வு முடிந்ததும் பட்டு சேலை மாற்றப்பட்டது' என தெரிவித்தார்.