கதறிய கர்ப்பிணி பெண்; பிரசவம் பார்த்த செவிலியர்கள் - பறிப்போன குழந்தை உயிர்!
செவிலியர்கள் பிரசவம் பார்த்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவம் பார்த்த செவிலியர்கள்
திருவண்ணாமலை, தெள்ளார் புதிய காலணி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பவானி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். தொடர்ந்து, பிரசவத்திற்காக தெள்ளார் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் செவிலியர்கள் மருத்துவம் பார்த்துள்ளனர். அதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின், உடல் நிலை மாற்றம் ஏற்பட்டு எந்த ஒரு அசைவு இல்லாமல் இருந்துள்ளது.
குழந்தை பலி
மேலும், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, பதறிய உறவினர்கள் ழந்தை உயிரிழந்ததற்குக் காரணம் மருத்துவர்கள் இல்லாதது தான் எனவும், கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், ருத்துவ அலுவலர் ஹித்தேன்ஷா மற்றும் ன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் கலைந்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.