வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும் - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

artist cm wish tiruvalluvar image tamil letters
By Anupriyamkumaresan Jul 21, 2021 08:22 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தமிழ் எழுத்துக்களால் வரையப்பட்ட திருவள்ளுவர் ஓவியத்தை பார்த்து முதலமைச்சர் ஸ்டாலின் ஓவியரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

எந்த ஒரு மதத்தையும் சாராமல் உலக மக்கள் அனைவருக்காகவும் உலகப் பொதுமறை என்று போற்றப்படும் கூடிய திருக்குறளைத் தந்தவர் திருவள்ளுவர்.

வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும் - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு! | Tiruvalluvar Image Draw By Tamil Letters Cm Wish

வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் இரண்டு அடிகளில் உள்ளடக்கி திருக்குறளை வடித்தவர் திருவள்ளுவர். அதனால் தான் திருக்குறள் உலகப் பொதுமறை என்று பெயர் பெற்றது.

ஓவியர் கணேஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து. கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள 741 தமிழ் எழுத்துக்கள் கொண்டு திருவள்ளூர் ஓவியத்தை வரைந்தேன் என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.

வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும் - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு! | Tiruvalluvar Image Draw By Tamil Letters Cm Wish

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்பின் வழியது உயிர்நிலை” என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்!” என்று பதிவிட்டுள்ளார்.