திருவள்ளூர் மாணவி தற்கொலை...அண்ணன் முன்னிலையில் உடற்கூராய்வு-உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!
திருவள்ளூர் பள்ளி மாணவி உயிரிழந்து பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில், உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவி உயிரிழப்பு
திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. அந்த பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சக மாணவிகள் விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனை
அதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று மாணவி சரளாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மாணவியின் திடீர் மரணம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உடல் ஒப்படைப்பு
இந்தநிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மாணவி சரளாவின் பிரேத பரிசோதனை அண்ணன் சரவணன் முன்னிலையில் தொடங்கி நடைபெற்றது. பின்னர் பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில், உடலை வாங்க மறுத்த பெற்றோரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒப்புக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவியின் உடம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.