ஆதரவற்ற குழந்தைகளுக்காக காலணிகளை சுத்தம் செய்யும் பேராசிரியர்
தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கைவிடப்பட்டவர்களின் வாழ்விற்காக காலணிகளை துடைத்து பாலீஷ் போட்டு அதன் வருமானத்தை கொண்டு உதவி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த தனியார் கல்லூரியில் பேராசிரியரான செல்வக்குமார் என்பவர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு படிப்பு செலவு, மாற்றத்திறனாளிகள், தனித்து விடப்பட்ட முதியவர்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோரது நலனுக்காகவும் செல்வக்குமார் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக வார இறுதி நாட்களில் தெருவோரங்களில் அமர்ந்து பொதுமக்களின் காலணிகளை துடைத்து பாலீஷ் போட்டு அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தி வருகிறார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணியில் அவர் ஈடுபட்டுள்ள செல்வகுமார் புதுச்சேரி சென்று பல இடங்களில் சாலையோரம் அமர்ந்து பொதுமக்களின் காலணிகளை துடைத்தும், பாலீஷ் போட்டும் நிதி திரட்டினார்.
இதுபற்றி அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி அவரை அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.