முதல் முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ள கண்டிகை அணை - பீதியில் மக்கள்
tiruvallur
kandigai dam
fill
By Anupriyamkumaresan
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்டிகை அணை முதல்முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை அருகில் உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், மதுராந்தகம், ஏரிகள் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நான்கு முக்கிய ஏரிகளுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்டிகை ஏரியும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரமாக இருந்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கண்டிகை ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இப்போதுதான் கண்டிகை ஏரி முதன்முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.