நண்பனை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற வாலிபர் - அதிர்ச்சி சம்பவம்
திருவள்ளூரில் நண்பனை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொன்ற வாலிபரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் புல்லரம்பாக்கம் ஜேஜே நகரில் வசித்து வந்தவர் முருகன். இவர் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இவருடன் அப்பு என்கிற சுபாஷ்சந்திரபோஸ் பணிபுரிந்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் திடீரென்று இரவு முருகன் தனது வீட்டில் இருந்தபோது அவருடன் பணிபுரியும் அதே பகுதியை சேர்ந்த அப்பு, தனியாக பேச வேண்டும் என்று வெளியே அழைத்துச் சென்றிருக்கிறார்.
முருகனும் அதை நம்பி அப்புவுடன் தனியே சென்றபோது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முருகனை சரமாரியாக வெட்டிருக்கிறார். இந்த திடீர்தாக்குலில் படுகாயம் அடைந்த முருகன் தப்பி ஓடியிருக்கிறார்.
அவரை ஓட ஓட விரட்டிச் சென்று தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதில், முருகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் .
இதனையடுத்து அப்புவே புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் தானாகவே சென்று சரணடைந்திருக்கிறார் . பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
விசாரணையில், முருகனுக்கும் அப்புவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.