திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
திருவள்ளுர் மாவட்டம்
திருவள்ளுர் மாவட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். திருவள்ளூர் நகரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. அதன் பிறகு செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து பிரித்து இந்த புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.
தற்பொழுது இந்த மாவட்டத்தில் அம்பத்தூர், கும்மிடிபூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, திருத்தனி, பள்ளிப்பட்டு, மாதவரம், மதுரவாயல், திருவெற்றியூர் மற்றும் ஆவடி ஆகிய 12 வட்டங்கள் உள்ளன.
முதல் மாவட்ட ஆட்சியர்
திருவள்ளுர் மாவட்டம்புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட போது முதல் மாவட்ட ஆட்சியராக திருமதி. ஜெயஸ்ரீ ரகுநந்தன், இ.ஆ.ப. நியமனம் செய்யப்பட்டார். இவர் 01.01.1997 முதல் 31.08.1997 ஆட்சியராக பணிப்புரிந்தார்.பின்னர் இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு 2 வது மாவட்ட ஆட்சியராக கே.பிரபாகர் IAS மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இவரை தொடர்ந்து திருவள்ளுர் மாவட்டத்தில் இதுவரை 21 மாவட்ட ஆட்சியர்கள் பணியாற்றியுள்ளனர். சமீபத்தில் திருவள்ளுர் மாவட்டத்தின் 22 வது மாவட்ட ஆட்சியராக மருத்துவர். ஆல்பி ஜான் வர்கீஸ் IAS மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
ஆல்பி ஜான் வர்கீஸ் IAS
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆல்பி ஜான் வர்கீஸ். இவரது பெற்றோர் பிரவோமில் ஜான் வர்கீஸ் -சலோமி ஆவர். திருச்சூரில் உள்ள ஜூபிலி மிஷன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார். சிறு வயதிலிருந்தே ஆல்பி ஜான் வர்கீஸ் , சிவில் சர்வீசஸ் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி 2013 இல் ஐஏஎஸ்ஸில் சேர்ந்தார். இரண்டு வருட பயிற்சி காலத்திற்குப் பிறகு, டிசம்பர் 2015 இல் தேவகோட்டையில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். தேவகோட்டையில், திடக்கழிவு மேலாண்மை (SWM) துறையில் அவர் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றினார்.
பின்னர் 2018ல் தூத்துக்குடி ஆணையர், அதன்பின் 2020 சென்னை சுகாதார இணை இயக்குனர் பொறுப்புகளை கவனித்து வந்தார்.சென்னையில் கொரோனா பரவலை 7000ல் இருந்து 1000க்கும் கீழ் கொண்டு செல்வதில் இவரின் பங்கு முக்கியமாக இருந்தது.
பிரபுசங்கர் IAS
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் சென்னை பெருநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றப்பட்டார். அதன்பிறகு கரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த த.பிரபுசங்கர் திருவள்ளுர் மாவட்டத்தின் 23 வது மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
டாக்டர் பிரபு சங்கர், டி.வி.எஸ். லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பை முடித்தார். சமூக மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவராக பணியாற்றி உள்ளார்.யுபிஎஸ்சி தேர்வுகளில் டி.பிரபு சங்கர் அகில இந்திய அளவில் ஏழாவது ரேங்க் பெற்றுள்ளார்.
டாக்டர் பிரபுசங்கர் சென்னையில் குடும்ப மருத்துவராகவும், நீரிழிவு மருத்துவராகவும் பணியாற்றினார். தமிழகத்தின் பல்வேறு நிர்வாகப் பதவிகளில் பொதுச் சேவையில் கவனம் செலுத்தி பணியாற்றியுள்ளார்.
போலியோ ஒழிப்பு, சுற்றுச்சூழல் சுகாதாரம், தொற்றாத நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல பொது சுகாதாரப் பிரச்சினைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். கொத்தடிமைத் தொழிலில் அவர் செய்த பணிக்காக மகாராஷ்டிர மாநில மகளிர் ஆணையத்திடமிருந்து "பொது நீதி சாம்பியன்" விருதைப் பெற்றார்.