பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - பதறியடித்து திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்கள்!
தனியார் பள்ளியில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டில் உள்ள வேலம்மாள் தனியார் பள்ளி வளாகத்தில், 1 மெட்ரிக்குலேசன், 2 இன்டர்நேஷனல் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாக குறுஞ்செய்தி மூலம் மிரட்டல் புகார் வந்ததாக கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் 3 பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பெற்றோர்கள் மூலம் மாணவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் கவரப்பேட்டை காவல் துறையினர் மோப்ப நாய்கள் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர சோதனை
சுமார் 5,000 மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வரும் பள்ளியில் தற்போது வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் புரலியாக இருக்கும் என நம்புவதாகவும், தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டு உரிய தகவல் தெரிவிப்பதாகவும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.