துணி துவைக்க சென்ற இடத்தில் துயரம்! என்ன நடந்தது 5 பெண்களுக்கு?
திருவள்ளூர் அருகே துணி துவைக்க சென்ற இடத்தில் 3 சிறுமிகள் உட்பட 5 பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் புதுக்கும்மிடிபூண்டி அங்காளம்மன் கோவில் அருகே குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் குளத்தில் தான் அப்பகுதி மக்கள் வழக்கமாக துணி துவைத்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலை 3 சிறுமிகள் மற்றும் 2 பெண்கள் துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது அனைவரும் துணி துவைத்து கொண்டிருந்த போது இரண்டு சிறுமிகள் குளத்தில் இறங்கி விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு சிறுமிகளும் குளத்தில் உள்ள சேற்றில் சிக்கிகொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து மற்றொரு சிறுமியை அவர்களை காப்பாற்ற முயன்று சிக்கி கொண்டுள்ளார்.

இவர்கள் மூவரும் கத்தி கூச்சலிடவே, அந்த 2 பெண்களும் இவர்களை காப்பாற்ற குளத்தில் இறங்கியுள்ளனர்.

ஆனால் 5 பேரும் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கி
பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil
ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து IBC Tamil