'ஹாக்கி பேட்' கொண்டு வந்தால் ஸ்வீட்,காரம் இலவசம் - அதிரடி அறிவிப்பு
ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் வண்ணம் திருப்பூரில் உள்ள ஒரு பேக்கரி வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் 41 ஆண்டுக்கு பிறகு வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மத்திய, மாநில அரசுகள், பிசிசிஐ ஆகியவை பாராட்டுகளை தெரிவித்ததோடு சிறப்பு பரிசுகளையும் அறிவித்துள்ளது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் கே.செட்டிபாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி ஐயங்கார் பேக்கரியில் ஹாக்கி பேட்டுடன் வருபவர்களுக்கு அரை கிலோ இனிப்பு மற்றும் காரம் இலவசமாக வழங்கப்பட்டது.
ஹாக்கி விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்த வித்தியாசமான முடிவு எடுக்கப்பட்டதாக கடையின் உரிமையாளர் மகாலட்சுமி பூபதி தெரிவித்துள்ளார்.