திருப்பூரில் பரவ தொடங்கிய பன்றி காய்ச்சல் - பொதுமக்கள் அச்சம்
affected
tirupur
Swine flu
By Anupriyamkumaresan
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த 44 வயது நபர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதிமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த நபர் சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதன்காரணமாக இரு தினங்களுக்கு முன்பாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்துள்ளார். அந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது அந்த நபர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.