காலை உணவு சாப்பிட்ட சிறுவர்கள் பலி : விடுதியில் அரங்கேறிய சோக சம்பவம்

Crime
By Irumporai Oct 06, 2022 09:21 AM GMT
Report

திருப்பூர் தனியார் குழந்தை காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குழந்தைகள் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்ததாகவும். மேலும் சில குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

காலை உணவு சாப்பிட்ட சிறுவர்கள் பலி : விடுதியில் அரங்கேறிய சோக சம்பவம் | Tirupur 3 Children Died After Eating Spoiled Food

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 3 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஆட்சியர் விளக்கம்

இதுகுறித்து, திருப்பூர் ஆட்சியர் 3 குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணம் பரிசோதனைகளுக்கு பின்பே தெரியவரும். சிகிச்சை பெற்று வரும்சிறுவர்களின் சிறுநீர், மலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

காலை உணவு சாப்பிட்ட சிறுவர்கள் பலி : விடுதியில் அரங்கேறிய சோக சம்பவம் | Tirupur 3 Children Died After Eating Spoiled Food

மேலும், இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.  காப்பகத்தில் 3 குழந்தைகள் இறந்ததற்கு கெட்டுப்போன உணவே காரணம் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.