பப்ஜி விளையாடி தூக்கத்தை இடையூறு செய்த கல்லூரி மாணவனின் கையை வெட்டிய முதியவர்
திருப்பூர் முருகம்பாளையம் பாறைக்காட்டை சேர்ந்தவர் 19 வயதான கார்த்திக்.
தாராபுரத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
வீட்டுக்கு அருகே உள்ள துணி துவைக்கும் கல்லில் அமர்ந்து கார்த்திக் தனது நண்பர்களுடன் அடிக்கடி ‘பப்ஜி’ விளையாடுவது வழக்கம்.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் நண்பர்களுடன் அமர்ந்து கார்த்திக் ‘பப்ஜி’ விளையாடியுள்ளார்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 65 வயதான ராமசாமி என்பவர் தூங்குவதற்கு இடையூறாக இருப்பதாக கண்டித்து வேறு இடத்தில் போய் விளையாடுமாறு கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமசாமி வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து கார்த்திக்கை வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த கார்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கார்த்திக்கை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி ராமசாமியை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராமசாமி, ஒரு கொலை வழக்கு தொடர்பாக தண்டனை அனுபவித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து விடுதலையாகி வந்தது குறிப்பிடத்தக்கது.