என் மகனிடம் பேசாவிட்டால் உன் கணக்கு மதிப்பெண்ணின் கை வைப்பேன் - மிரட்டிய ஆசிரியை பணியிடமாற்றம்
என் மகனிடம் பேசாவிட்டால் உன் கணக்கு மதிப்பெண்ணின் கை வைப்பேன் என்று மாணவியை மிரட்டிய ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவியை மிரட்டிய ஆசிரியை
திருப்பூர் மாவட்டத்தில், உடுமலைப்பேட்டை அருகே காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சாந்தி பிரியா என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவியை மருமகள் என உறவுமுறை வைத்து அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து, தனது மகனிடம் செல்போனில் பேசுமாறு அந்த மாணவியிடம் தினமும் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அந்த மாணவி பேச மறுத்து வந்துள்ளார்.
இதன் பின்பு, என் மகனுடன் பேச மறுத்தால் உன் மதிப்பெண்ணின் கை வைப்பேன் என்று அந்த மாணவியை சாந்தி பிரியா மிரட்டியுள்ளார். இது குறித்து அந்த மாணவி தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பணியிடமாற்றம்
பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியை சாந்தி பிரியாவை பூலாங்கிணறு அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.