திருப்பூர் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம், 2009 பிப்ரவரி 22 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்று. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து திருப்பூரை தனி மாவட்டமாக பிரித்து அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இம்மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 33 உள்வட்டங்களும் மற்றும் 350 வருவாய் கிராமங்களும், 13 ஊராட்சி ஒன்றியங்களும், 265 கிராம ஊராட்சிகளும், திருப்பூர் மாநகராட்சியும், 6 நகராட்சிகளும், 15 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை பின்னலாடை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு பனியன், ஜட்டி போன்ற பின்னலாடை தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளது.மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர்கள்
திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு அப்போது முதல் மாவட்ட ஆட்சியராக சமயமூா்த்தி அவர்கள் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இவர் 22-02-2009 முதல் 01-06-2011 வரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். இவரை தொடர்ந்து எம். மதிவாணன் நியமிக்கப்பட்டார். இவரது பதவி காலம்03-06-2011 முதல் 30-09-2012 வரை ஆகும்.
ஜி. கோவிந்தராஜ் பதவி காலம் 06-10-2012 முதல் 21-01-2016வரையிலும், எஸ். ஜெயந்தி 22-01-2016 முதல் 04-06-2017வரையிலும், கே.எஸ். பழனிசாமி 08-06-2017 முதல் 24-09-2019 வரை பணியாற்றினார். இவரை தொடர்ந்து விஜய கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
மேலும் கஜலட்சுமி,கஜலட்சுமி, பிரசன்னா ராமசாமி, உள்ளிட்ட 10 பேர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளனர்.
வினீத் ஐ.ஏ.எஸ்
திருப்பூர் மாவட்டத்தின் 10 வதுஆட்சியராக மருத்துவர் வினீத் நியமிக்கப்பட்டார். வினீத் பள்ளிப்படிப்பை கேரளமாநிலம் கொல்லத்தில் முடித்துள்ளார். திருவனந்தபுரத்தில், மருத்துவம் பயின்ற வினீத், காசர்கோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர், 2013-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.
அதன்பின்னர் தமிழகத்தில் ராமநாதபுரம் தொடங்கி பல்வேறு இடங்களில் பணியாற்றியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் 2017-ம் ஆண்டு சார் ஆட்சியராக வினீத் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த வினீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
கிறிஸ்துராஜ் ஐ.ஏ.எஸ்
இதனை தொடர்ந்து சேலம் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த கிறிஸ்துராஜ் திருப்பூர் மாவட்டத்தின் 11 வது புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் உதவி ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.
அதன் பிறகு நாகபட்டினத்தில் வருவாய் கோட்டாட்சியராகவும் , கருர், கோவை மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக உள்ள கிறிஸ்து ராஜ் அடிக்கடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
கவனம் ஈர்த்த கிறிஸ்துராஜ்
அந்த வகையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வரும் மாணவனை அவர் சந்தித்து நலம் விசாரித்து மாணவரிடம் பேசினார்.
ஆட்சியர் கிறிஸ்து ராஜ்‛‛20ம் வகுப்பில் பெயில் ஆன பிறகு மீண்டும் தேர்வு எழுதி படித்த நான் கலெக்டராகி விட்டேன். உன்னால் முடியாதா? இப்போது தான் நாம் தைரியமாக இருக்க வேண்டும். மேலும் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். தொடர்ந்து நன்றாக படி.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடு. நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு செல்போனில் அழைத்து கண்டிப்பாக கூற வேண்டும்'' என ஊக்கப்படுத்தியது அனைவரது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.