திருப்பூர் விஜய் பிரச்சார கூட்டத்தில் அடுத்தடுத்து மயங்கி விழுந்த 7 பெண்கள்
திருப்பூரில் நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் 9 பேர் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் இன்று நடைபெற்ற பிரசாரத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட 8 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்தார்.
விஜய் வருகைக்காக பெருமாநல்லூரில் ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதலே காத்திருந்தனர்.

தவெக சார்பில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டாலும், கடும் வெயில் காரணமாக 7 பெண்கள், ஒரு ஆண் மற்றும் வேட்பாளர் சுகுமார் உள்ளிட்ட 9 பேர் மயக்கம் அடைந்தனர்.
இதனைதொடர்ந்து, மயங்கியவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரசாரத்திற்கு குழந்தைகளுடன் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தும், பலர் குழந்தைகளுடன் வெயிலில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.