திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சி - சிறப்பு தரிசனம், லட்டு முக்கிய அப்டேட்!
லட்டின் விலை குறித்த செய்திகளுக்கு தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.
சிறப்பு தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபாதையில் செல்லும் திவ்ய தரிசனம், இலவச தரிசனம், ரூ 300 சிறப்பு தரிசனம் உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளது.
இதில், ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் 3 மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் கிடைக்கும். இதில் தரிசனம் செய்தால் 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு வேண்டும் என்றால் லட்டு கவுன்டர்களில் ரூ 50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் விலையையும் லட்டு பிரசாதத்தின் விலையையும் ஆந்திராவில் புதிதாக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு அரசு உயர்த்தியதாக தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து தேவஸ்தானம் செய்து செய்தியறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
லட்டு விலை உயர்வு?
அதில், ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் லட்டு பிரசாத விலையிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. https://ttdevasthanams.ap.gov.in என்ற தேவஸ்தானத்தின் இணையத்தில் மட்டுமே தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் முன்பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
பல்வேறு மாநில சுற்றுலாத் துறைக்காக குறிப்பிட்ட அளவிலான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பக்தர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துக் கொள்ளலாம். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஸ்ரீவாரி மெட்டுவில் திவ்ய தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் 1200 ஆவது படியில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
அப்படி ஸ்கேன் செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யலாம். திவ்ய தரிசன டோக்கன்களை ஸ்கேன் செய்யாத பக்தர்கள், திருமலையை அடைந்ததும், தரிசன வரிசையில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே பக்தர்கள் இந்த நடைமுறையை கவனித்து அதன்படி சுவாமி தரிசனத்திற்கு வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.