திருப்பதியில் சர்வதர்ஷன் டிக்கெட் பெற அலைமோதிய கூட்டம் - நெரிசலில் சிக்கி மூச்சு திணறிய மக்கள் - 3 பேர் காயம்

wave tirupati திருப்பதி sarvadarshan-ticket 3-people-injured சர்வதர்ஷன் டிக்கெட் கூட்டம் 3பேர்காயம்
By Nandhini Apr 12, 2022 07:41 AM GMT
Report

ஆந்திர பிரதேசம், திருப்பதியில் உள்ள திருமலை கோவில், சர்வதர்ஷன் டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக கோவிலில் உள்ள டிக்கெட் கவுன்டரில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

திருப்பதியில் உள்ள மூன்று டோக்கன் கவுன்டர்களிலும் கூட்டம் அலைமோதியது. இதனால், திருமலை சன்னதியில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் மக்கள் சிக்கித் தவித்தனர்.

சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கிய 3 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, கூட்ட நெரிசலை சமாளிக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் தரிசனத்திற்காக நேரடியாக திருமலை பெட்டிகளுக்குள் அனுமதிக்க முடிவு செய்தது. இதனையடுத்து, கூட்டம் கலைந்து சாதாரண நிலைமை ஏற்பட்டது.