நவீன வசதியுடன் ரூ.350 கோடி செலவில் அமைய உள்ள திருப்பதி ரயில் நிலையம்
By Nandhini
நாட்டின் பல மூலைகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியை நோக்கி தினம் தோறும் படையெடுத்து வந்துக் கொண்டிருக்கின்றனர். அதிலும் வார இறுதி நாட்கள், இதர விடுமுறை நாள்கள் பக்தர்களின் கூட்டம் திருப்பதியில் அலைமோதுகிறது.
பெரும்பாலான பக்தர்கள் திருப்பதி வருவதற்கு ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரூ.350 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் திருப்பதி ரயில் நிலையத்தை அமைக்க உள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரூ.350 கோடி செலவில் 23 லிப்ட், 20 எஸ்கலேட்டர், காத்திருப்பு அறைகள், உணவகங்கள், ஓய்வு அறைகள், பூங்கா, வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் திருப்பதி ரயில் நிலையம் அமைய உள்ளது.