மறுத்த மருத்துவமனை - கர்ப்பிணி நடுரோட்டில் குழந்தை பெற்ற கொடூரம்!

Pregnancy Andhra Pradesh
By Sumathi Nov 22, 2022 08:27 AM GMT
Report

மருத்துவமனை அலட்சியத்தால் கர்ப்பிணி நடுரோட்டில் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்ப்பிணி 

திருப்பதி அருகே அரசு மகப்பேறு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கருவுற்ற பெண் ஒருவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவர் உதவிக்காக தன்னுடன் யாரையும் அழைத்து வராததால், மருத்துவமனை நிர்வாகம் அவரை சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

மறுத்த மருத்துவமனை - கர்ப்பிணி நடுரோட்டில் குழந்தை பெற்ற கொடூரம்! | Tirupati Pregnant Woman Birth Baby On The Road

இதனால், மருத்துவமனை வளாகத்தில் அந்தப் பெண் காத்திருந்தார். அதில், திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, வலியால் துடித்து சாலையில் விழுந்துள்ளார். தொடர்ந்து, உடனே அருகிலிருந்தவர்கள் போர்வை ஆகியவற்றை பயன்படுத்தி, அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதையறிந்து அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள்,

மருத்துவமனை அலட்சியம்

உடனடியாக பெண்ணையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த தகவல் வெளியாகி பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதனையடுத்து இந்த விவகாரம் பெரிதான நிலையில்,

உதவியாளர் யாரும் இல்லாததால் பெண் அனுமதிக்கப்படவில்லை என்ற தகவல் பொய்யானது என மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இதனிடையே, சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய, ஆந்திர மாநில சுகாதார அமைச்சகம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.