திருப்பதிக்கு செல்ல நினைக்கும் பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டோக்கன்களை ஆன்லைனில் இன்று முதல் வெளியாகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலவச தரிசனம் கடந்த மாதம் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மீண்டும் தொடங்கப்பட்டது. இதற்கான டோக்கன்கள், திருப்பதி பேருந்து நிலையம் அருகேயுள்ள சீனிவாசா வளாகத்தில் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் நாள்தோறும் கொடுக்கப்படும் 8,000 டோக்கன்களுக்காக, அங்கு 30,000 பக்தர்கள் குவிந்து வந்தனர்.இதனால் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படும் சூழல் உருவானதால், கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல், இலவச தரிசனத்திற்கான டோக்கன் ஆன்லைனிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நவம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் காலை 9 மணி முதல் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
22ஆம் தேதி நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்கும் வகையில் நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் டிக்கெட்டுகள் என்ற வகையில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளையும், 23ஆம் தேதி நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன்களையும் ஆன்லைனில் நாம் பெறலாம்.