திருப்பதி செல்ல நினைக்கும் பக்தர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச டோக்கன் புக்கிங் நாளை ஆரம்பம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டோக்கன்கள் நாளை (டிசம்பர் 27ஆம் தேதி) காலை 9 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறந்திருக்கும் என்றும், அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலும், ஜனவரி மாதத்தின் மற்ற நாட்களில் தினமும் 10,000 என்று எண்ணிக்கையிலும் இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதனால் பக்தர்கள் ம்கிழ்ச்சியடைந்துள்ளனர்.