புத்தாண்டு வரை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியாது - பக்தர்கள் ஏமாற்றம்

tirupati specialdarshanticket
By Petchi Avudaiappan Oct 22, 2021 06:08 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கான சிறப்பு தரிசன கட்டண டோக்கன் டிசம்பர் 31 ஆம் தேதி வரை விற்று தீர்ந்தது. 

கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை தொடர்ந்து திருப்பதி திருமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இலவச தரிசனத்துக்கான டோக்கன் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் நாள்தோறும் 300 ரூபாய் தரிசனத்துக்கு 12 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவம்பர், டிசம்பர் மாதத்தில் ரூ.300 தரிசனத்துக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கிய நிலையில் சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் விரைவாக விற்றுத் தீர்ந்தது.

இதனால் சிறப்பு கட்டண தரிசன டோக்கன் மூலம் 2022ம் ஆண்டுதான் ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்க முடியும். அதேசமயம் இலவச தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் ஆன்லைன் மூலம் நாளை தொடங்கவுள்ளது. நாளொன்றுக்கு 8000 என்ற எண்ணிக்கையில் வெளியிடப்பட இருக்கும் இலவச தரிசன டோக்கன்களை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.